வைரல் வீடியோ!!” தல” தோனிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பணிப்பெண்!!

 
தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவர்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். கடந்த ஐபிஎல் சீசனுடன் ஓய்வு பெறுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. இன்னும் ஒரு சீசன் விளையாடுவேன் ரசிகர்களுக்காக என்று கூறியதில் ரசிகர்கள் அவரின் ஒவ்வொரு அசைவையும் புகைப்படங்கள், வீடியோக்களாக படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.   இந்நிலையில், தனது குடும்பத்தினருடன் விமானத்தில் பயணித்து கொண்டிருக்கிறார்.


 


விமான பயண நேரத்தை கழிக்க தான் வைத்திருந்த ‘டேப்’பில் ‘காண்டி கர்ஷ்’ கேமை விளையாடி கொண்டு இருந்தார். அப்போது விமான பணிப்பெண் ஒருவர் தட்டில் சாக்லெட்டுகளை எடுத்து வந்து தோனியிடம் வழங்கினார். இதை பார்த்து மகிழ்ந்த தோனி, உங்களின் அன்புக்காக எடுத்துக் கொள்கிறேன் எனக் கூறி ஒரே  ஒரு சாக்லெட்டை மட்டும் எடுத்துக் கொண்டார். அதன் பிறகு  அந்த பணிப்பெண் ஒரு பேப்பரை கொடுத்தார். அந்த பேப்பரில் ஏதோ எழுதி இருந்தது.

தோனி

அதை படித்து பார்த்த தோனி, பணிப்பெண்ணுக்கு நன்றி தெரிவித்தார். அதே சமயத்தில் தல தோனி மீதமுள்ள சாக்லெட்டுகளை திருப்பி கொடுத்து விட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காணொலி வைரலான 3 மணிநேரத்தில் கேண்டி கிரஷ் செயலியை 3.6 மில்லியன் பேருக்கு மேல்  பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.  இதற்காக கேண்டி கிரஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தோனிக்கு நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

From around the web