"22 வயதில் உலகையே மிரட்டும் இந்திய வம்சாவளி இளைஞர் !"... போர்ப்ஸ் பட்டியலில் சூர்யா மிதா சாதனை!

 
surya mitha surya mitha

உலகப் புகழ்பெற்ற ஃபோர்ப்ஸ்   இதழ், 2026-ஆம் ஆண்டிற்கான 30 வயதுக்குட்பட்ட இளம் கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 30 வயதுக்குக் குறைவான 35 இளைஞர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், அவர்களின் மொத்த சொத்து மதிப்பு 92.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்தப் பட்டியலில் ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்திருப்பவர் 22 வயதேயான இந்திய வம்சாவளி இளைஞர் சூர்யா மிதா  

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் 'மெட்கோர்' என்ற நிறுவனத்தின் நிறுவனரான சூர்யா மிதா, இந்தப் பட்டியலில் 6-வது இடத்தைப் பிடித்துப் பெரும் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் பயின்ற இவர், தனது நண்பர்களான ஆதர்ஷ் ஹிரேமத் மற்றும் பிரெண்டன் பூட்டி ஆகியோருடன் இணைந்து, நிறுவனங்களுக்கான ஆள் சேர்ப்பு   பணியை எளிதாக்கும் ஏஐ மென்பொருளை உருவாக்கினார். குறுகிய காலத்திலேயே இவரது நிறுவனத்தில் சுமார் ரூ.3,100 கோடி (350 மில்லியன் டாலர்) முதலீடு செய்யப்பட்டுள்ளது.

சிறு வயதிலேயே சுய உழைப்பில் கோடீஸ்வரராகி, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் முந்தைய சாதனைகளை சூர்யா மிதா முறியடித்துள்ளார். "பெரிய கனவுகளைக் காண்பது மட்டுமல்ல, அதைச் செயல்படுத்தும் வேகமும் இருந்தால் யாராலும் எட்ட முடியாத உயரத்தைத் தொடலாம்" என்பதற்குச் சூர்யா மிதாவின் இந்த வெற்றி ஒரு சிறந்த உதாரணமாகும். இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் உலகளாவிய தொழில்நுட்பத் துறையில் இவ்வளவு பெரிய இடத்தைப் பிடித்திருப்பது இந்தியர்களுக்குப் பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!