இந்தியாவின் 53வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியேற்பு... பிரதமர் வாழ்த்து!
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்த கவாய் நேற்று ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அவருடைய வாரிசாக நீதிபதி சூர்யகாந்த் இன்று 53வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார். டெல்லி தர்பார் அரங்கில் நடந்த எளிய, ஆனாலும் சிறப்பு மிக்க விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பிரமாண விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், டெல்லி துணைநிலை ஆளுநர், டெல்லி முதல்மந்திரி ரேகா குப்தா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். அதுமட்டுமல்லாமல் மலேசியா, இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

சூர்யகாந்த் 2027 பிப்ரவரி 9ஆம் தேதி வரை சுமார் 15 மாதங்கள் தலைமை நீதிபதி பொறுப்பில் பணியாற்றவுள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, “சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் சூர்யகாந்தின் எதிர்காலப் பயணம் சிறக்க மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்” என பதிவிட்டார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
