“சுஷாந்த் தவிர யாராலும் ராமரைப் போல நடிக்க முடியாது” - தங்கை உருக்கம்!

 
சுஷாந்த் சுஷாந்த்


பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் 'ராமாயணா' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தை ராமர் தோற்றத்தில் சித்தரிக்கும் ஏஐ புகைப்படங்கள் ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளன.நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கும் 'ராமாயணா' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இசையில் உருவான இந்த டீசர் காட்சிகளில், ரசிகர்கள் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல்வேறு நடிகர்களைப் பொருத்திப் பார்த்து வருகின்றனர். அந்த வகையில், சுஷாந்த் சிங் ராஜ்புத்தை ராமர் வேடத்தில் பொருத்தி உருவாக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவியது.

சுஷாந்த்

இந்த ஏஐ புகைப்படத்தைப் பார்த்த சுஷாந்தின் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் மிகவும் உருக்கமான ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"ராமர் என்பது வெறும் ஒரு கதாபாத்திரம் மட்டுமல்ல; அது நேர்மை மற்றும் தர்மத்தின் அடையாளம். இந்த ஏஐ படத்தில் சுஷாந்த் மிகவும் தெய்வீகமாகவும், கம்பீரமாகவும் தோற்றமளிக்கிறார். ராமர் கொண்டிருக்கும் மனவலிமை சுஷாந்தின் முகத்தில் பிரதிபலிக்கிறது. அவரது கண்களில் உள்ள பிரகாசமும், முகத்தில் தெரியும் அந்தத் தேஜஸும், சுஷாந்தைத் தவிர வேறு யாராலும் ராமராக இவ்வளவு சிறப்பாக நடிக்க முடியாது என்பதை உறுதிப்படுத்துகின்றன."

சுஷாந்த்

சுஷாந்த் சிங்கின் ரசிகர்கள் இந்தப் புகைப்படத்தைக் கண்டு, "உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் இந்தப் பாத்திரத்தில் சுஷாந்த் மின்னியிருப்பார்" என கமெண்ட் செய்து வருகின்றனர். ரன்பீர் கபூர் நடிப்பில் படம் வெளியாக உள்ள நிலையில், சுஷாந்தின் இந்தத் தோற்றம் ஒருபுறம் பேசுபொருளாக மாறியுள்ளது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!