ஹனிமூனில் புதுமாப்பிள்ளை கொலை வழக்கில் பரபரப்பு... இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட மனைவியின் கள்ளக்காதலன்.!

 
சோனம்

மேகாலயாவில் ராஜா ரகுவன்ஷி கொலையில் பரபரப்பு திருப்பம் ஏற்பட்டுள்ளது.  அதன்படி கொலை செய்த குற்றவாளிகளில் ஒருவரான ராஜ் குஷ்வாஹா, ராஜா ரகுவன்ஷியின் இறுதிச் சடங்கிற்கு வருகை தந்தார். அவர் மக்களை அழைத்துச் செல்லும் வாகனத்தை ஓட்டிச் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.  இந்தூரைச் சேர்ந்த ராஜா ராகுவன்ஷி மற்றும் சோனம் ராகுவன்ஷி தம்பதிக்கு மே 11ம் தேதி பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்று வருகிறது. இருவரும் தேன் நிலவிற்காக மே 20ம் தேதி மேகாலயா மாநிலம் ஷில்லாங் செல்கிறார்கள்.

சோனம்


மே 22 ம் தேதி இந்த தம்பதியினர் காணாமல் போகின்றார்கள், வட மாநிலம் முழுவதும் இதுதான் கடந்த சில நாட்களாக பேச்சாக இருந்து வருகிறது. ஜூன் 2ம் தேதி கணவன் உயிரிழந்த சடலமாக மீட்கப்பட்டு உள்ளார்.  ஜூன் 9ம் தேதி மனைவி காவல்துறையினரால் கைது செய்யப்படுகிறார்.
கணவனை திட்டமிட்டு கொலை செய்த குற்றத்திற்காக அவரிடம் சேர்த்து நான்கு  கொலையாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அதில் ஒருவரான ராஜ் குஷ்வாஹா என்பவர் சோனமின் கள்ளக்காதலன் என அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  

உத்தரபிரதேச போலீஸ்

ராஜா ரகுவன்ஷி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரும், சோனம் குஷ்வாஹாவின் காதலருமான ராஜ் குஷ்வாஹா, பாதிக்கப்பட்டவரின் இறுதிச் சடங்கிற்கு மக்களை ஏற்றிச் செல்ல வாகனத்தை ஓட்டிச் சென்றதாக நேரில் கண்ட ஒருவர் தெரிவித்தார்.
ராஜா ரகுவன்ஷி இறுதிச் சடங்கில் நேரில் பார்த்ததை போலீசாரிடம் விவரித்த லட்சுமன் சிங் ரத்தோர், “ராஜாவின் உடல் இங்கு வந்தபோது, ​​கோவிந்த் நகர் கார்ச்சா பகுதியில் வசிக்கும் சோனமின் குடும்பத்தினர், இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள  5 வாகனங்களை ஏற்பாடு செய்திருந்தனர்.  அழுது கொண்டிருந்த சோனமின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதாகவும்,  நான் சென்ற நான்கு சக்கர வாகனத்தை ராஜ் குஷ்வாஹா ஓட்டிச் சென்றார், அப்போது எங்களுக்கு எதுவும்தெரியாது. அவர் கைது செய்யப்பட்ட பிறகு தான் சமூக வலைதளங்களில் அவரது புகைப்படத்தைப் பார்த்த பிறகு எனக்கு நினைவுக்கு வந்தது” எனக் கூறியிருக்கிறார்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது