மனைவியின் நடத்தையில் சந்தேகம்... மதுபோதையில் கழுத்தறுத்துக் கொன்ற கணவன்!

 
மனைவி கொலை

சென்னையை அடுத்த படப்பை பகுதியில் உள்ள சாலமங்கலம் ஆத்ணஞ்சேரி பகுதியில் வசித்து வருபவர் கங்காதரன். டிரைவாக பணிபுரிந்து வரும் இவரது மனைவி நந்தினி (29). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

கங்காதரனுக்குத் தனது மனைவி நந்தினியின் நடத்தையின் மீது அண்மைக்காலமாக சந்தேகம் ஏற்பட்டது. இந்த சந்தேகத்தின் காரணமாக கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டைகளும் தகராறுகளும் ஏற்பட்டு வந்தன.

பள்ளி மானவி தற்கொலை

இந்நிலையில், நேற்று மதியம் கங்காதரன் மதுபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போதும் மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், நந்தினியைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த நந்தினி, சண்டையைத் தவிர்ப்பதற்காக அங்கிருந்து புறப்பட்டு பக்கத்துத் தெருவில் உள்ள தனது பெரியம்மா வீட்டுக்குச் சென்றார்.

மனைவி அங்கிருந்து சென்றதைக் கண்ட கங்காதரன், அவளைப் பின்தொடர்ந்து பெரியம்மா வீட்டுக்கும் சென்றுள்ளார். அங்கும் மனைவியுடன் மீண்டும் மோதலில் ஈடுபட்ட அவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நந்தினியின் கழுத்தில் குத்தினார். அதோடு நிற்காமல் கழுத்தை அறுத்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த நந்தினி, ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக அதே இடத்தில் உயிரிழந்தார்.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

இந்த வெறிச்செயலைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக மணிமங்கலம் காவல் நிலையத்துக்கு இது குறித்து தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற போலீசார், நந்தினியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்தக் கொலையைச் செய்த கங்காதரனைக் கைது செய்த போலீசார், கொலைக்கான வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!