எஸ்வி சேகர் தடாலடி... விஜய்க்கு சினிமா முதலமைச்சர் வேறு, நிஜ முதலமைச்சர் வேறு என்பது தெரியவில்லை!

 
எஸ்வி சேகர்


 
தமிழகத்தில் சென்னை அருகே அயப்பாக்கத்தில் வில்லிவாக்கம் மத்திய  திமுக சார்பில் முதல்வர்  பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் துரை வீரமணி தலைமையில் அமைச்சர் மா.சுப்பிரமணியம், நடிகர் எஸ்.வி.சேகர், எம்.எல்.ஏ காரம்பாக்கம் கணபதி ஆகியோர்  கலந்து கொண்டனர். இதில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.  இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் எஸ்வி சேகர், “உலகத்திலேயே வலிக்காத சவுக்கு கோயம்புத்தூரில் தான் கிடைப்பதாக தெரிவித்துள்ளனர்.  அத்தனை அடி அடித்தும் ஒரு காயம் கூட இல்லை. செருப்பு போட மாட்டேன் என தெரிவித்துள்ளார்.  ஷூ போட்டு செல்கிறார். 

எஸ்வி சேகர்

செருப்பு தான் போட மாட்டேன் என்றால் அதனால் தான் ஷூ அணிந்து செல்கிறார். வாயைத் திறந்தால் பொய் பேசுகிறார் அண்ணாமலை. தேசவிரோதி என்று சொல்ல யாருக்கும் தகுதி இல்லை, இந்தியாவில் பிறந்தால் இந்தியன். தமிழ்நாட்டில் பிறந்தால் தமிழன். அவ்வளவுதான் தேசவிரோதி என்று குறிப்பிடுபவரை லூசு என்றுதான் சொல்ல வேண்டும். தேசத்திற்குள் தமிழ்நாடு இல்லையா? இதில் என்ன தேச விரோதம் தமிழ்நாட்டிற்கு விசுவாசமாக இருந்தாலே அது தேசத்திற்கு விசுவாசமாக இருந்தது போல் தான். 

விஜய்

நான் எந்த கட்சியும் இல்லாமல் ஒரு நடிகனாக, இந்த அரசின் திட்டங்களை வரவேற்கின்ற முதலமைச்சரின் நண்பனாக இருக்கின்றேன். முதல்வர் ஒன்றும் 6 வருடம் காவல்துறையிலிருந்து அங்கு வேலை விட்டு தூக்கி விடுவார்கள் என அரசியலுக்கு வந்தவர் அல்ல. இனிமேல் என்னை யாரும் நகைச்சுவை சக்கரவர்த்தி எனக் கூற வேண்டாம் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையை நகைச்சுவை சக்கரவர்த்தி என கூறலாம். விஜய்க்கு சினிமா முதலமைச்சர், வேறு நிஜ முதலமைச்சர் வேறு என்பது தெரியவில்லை. விஜய் படத்தை ஒரு கோடி பேர் பார்த்தால் கூட ஹிட் ஆகும், ஆனால் இங்கு 10 கோடி பேர் சேர்ந்தால் தான் முதலமைச்சராக முடியும்” என தெரிவித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web