காரடையான் நோன்பிற்கு இனிப்பு கார அடை செய்யும்முறை!

இனிப்பு கார அடை செய்ய தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்:
வறுத்த பச்சரிசி மாவு 1 கப்
வெல்லம்- 1 கப்
தேங்காய் - 1/2 கப்
காராமணி -1/4 கப்
ஏலக்காய் தூள்- 1சிட்டிகை
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
காராமணியை 4 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும். காராமணியை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் அடி கனமான பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி எடுக்க வேண்டும். மீண்டும் வாணலியில் சேர்த்து வெல்லக்கரைசல் கொதிக்க ஆரம்பிக்கும் போது வேக வைத்த காராமணி, தேங்காய் துண்டுகள் மற்றும் ஏலக்காய்ப் பொடி அனைத்தையும் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். இதன்பிறகு வறுத்த பச்சரிசி மாவை சிறிது சிறிதாக போட்டு கட்டி தட்டாமல் தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
மாவு நன்றாக வெந்ததும் அடுப்பில் இருந்து மாவினை இறக்கி வைத்து விட வேண்டும். கையில் சிறிது வெண்ணெய் தடவி அதில் இந்த மாவை அடை போன்று தட்டிவிட்டு வாழை இலையில் வைக்கவும். இவைகளை இட்லி பாத்திரத்தில் 10 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுத்தால் தித்திப்பான சுவையான காரடையான் நோன்பு அடை தயார். இதனை காமாட்சிக்கு படைத்து ஸ்லோகம் சொல்லி தாலிச்சரடை மாற்றிக் கட்டிக் கொள்ள வேண்டியது தான்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!