குளிர்காலத்தை சுறுசுறுப்பாக்கும் இனிப்பு பானங்கள்... !

 
ஸ்ட்ராபெர்ரி

குளிர்காலத்தில் பொதுவாகவே சோம்பல் அதிகமாக இருக்கும். குளிருக்கு இன்னும் கொஞ்சம் இழுத்து போர்த்தி தூங்கலாம் என்பது தான் பலரின் நினைப்பும். அதிலும் இணைநோய் இருப்பவர்களுக்கு வலியும் வேதனையும் அதிகமாக இருக்கும். குளிர்காலத்திலும் சுறுசுறுப்பாக நம்மை வைத்து கொள்ள தொடர் பயிற்சியுடன் எலும்புகளை சரியான முறையில் பராமரித்தால் இந்த சோம்பல் விலகி விடும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.  

உஷார்!! குழந்தைகளுக்கு பால், நெய் எந்தளவுக்கு தரலாம்?
குளிர்காலத்தில் சூரிய ஒளி குறைவாக இருப்பதால் நம் உடலில் வைட்டமின் டி குறைகிறது. எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு வைட்டமின் டி அவசியம்.  உணவின் மூலம் உறுதி செய்து கொள்ளலாம்.  எலும்புகளை வலுவடையச் செய்யும் சில சுவையான மற்றும் சத்தான பானங்கள் குறித்து காணலாம்.  ஆரஞ்சு பழத்தில் உள்ள  கால்சியம் மற்றும் வைட்டமின் சி மற்றும் எலும்புகளை வலுப்படுத்த உதவுகின்றன.  அதே போல் பால்  எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகின்றன.
 
எலும்புகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் கீரை  , பச்சைக் காய்கறிகளில்  ஸ்மூத்தி செய்து குடிக்கலாம்.  பாதாம் பால் மற்றும் பேரீச்சம்பழம் கலந்து பானமாக தயாரித்து தினமும் குடித்து வரலாம்.  இது எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது. அன்னாசிப்பழத்தில் உள்ள ஏராளமான கால்சியம் மற்றும் தாதுக்கள்  எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதன் சாற்றை தினமும் காலையில் குடித்து வந்தால் எலும்புகள் வலுவாக இருக்கும்.  உணவில் அவுரிநெல்லிகளை சேர்த்துக்கொள்வது வீக்கத்தைக் குறைப்பதற்கும் மூட்டுவலி அறிகுறிகளைப் போக்குவதற்கும் உதவும். 

இந்த ஜூஸ் பெஸ்ட்! வெய்யிலும் சேட்டை செய்யாது.. எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்!
செர்ரிகள், குறிப்பாக புளிப்பு செர்ரிகள், கீல்வாதத்தை நிர்வகிக்கின்றன. அவை உடலில் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கலாம்.  செர்ரி அல்லது செர்ரி ஜூஸ் உட்கொள்வது அழற்சியின் குறிப்பான்கள் குறைவதற்கும் கீல்வாதம் உள்ள நபர்களிடையே வலியின் அளவைக் குறைப்பதற்கும் உதவுகின்றன.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web