டிஜிட்டல் மயமாகும் தேர்தல் களம்... ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் செய்ய ‘ஆப்’ அறிமுகம்!
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் எளிதாக அனுமதி பெற 'சுவிதா 2.0' (Suvidha 2.0) என்ற புதிய செயலியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை ரிப்பன் மாளிகையில் நேற்று (மார்ச் 16) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் இந்தத் தகவலைத் தெரிவித்தார். இந்தச் செயலி மற்றும் இணையதளம் வாயிலாக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யவும், பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் தற்காலிகக் கட்சி அலுவலகங்கள் அமைக்கவும் டிஜிட்டல் முறையில் அனுமதி பெறலாம். விண்ணப்பங்கள் நிகழ்வு தொடங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் பணிகளுக்காக போலீஸ் மற்றும் தேர்தல் அலுவலர்கள் உள்ளடக்கிய 375 மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் வாக்கு இயந்திரங்களைப் பாதுகாத்தல், வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைத்தல் மற்றும் வாக்குப்பதிவு முடிந்தவுடன் மீண்டும் மையங்களுக்குக் கொண்டு வருதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும். சுமார் 16,500 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க ரிப்பன் கட்டடத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, 18004257012 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தேர்தல் விதிமீறல்கள் குறித்து உடனடியாகத் தகவல் தெரிவிக்கலாம்.

தேர்தல் செலவினங்களைப் பொறுத்தவரை, ஒரு தொகுதியில் ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 40 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விரிவான விலைப்பட்டியல் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு செலவும் இந்த விலைப்பட்டியலின் அடிப்படையில் கணக்கிடப்படும். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், அரசியல் கட்சிகள் உரிய அனுமதியின்றி எவ்வித நிகழ்வுகளையும் நடத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையிலான இந்த வசதிகள் தேர்தல் பணிகளில் அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
