இன்று முதல் ஸ்விக்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!! உணவு சேவை முற்றிலும் பாதிப்பு!!

 
ஸ்விக்கி

தமிழகம் முழுவதும் ஸ்விக்கி மூலம் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஸ்லாட்’ என்ற முறையை திரும்ப பெற வேண்டும் எனவும் ஏற்கனவே வழங்கிவந்த ‘டர்ன் ஒவர்’  தொகையை மீண்டும் வழங்க வேண்டும்  எனவும் வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக ஊழியர்கள் அறிவித்துள்ளனர். தற்போது, இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள ஸ்விக்கி ஊழியர்கள் பங்கேற்றுள்ளதால், உணவு டெலிவரி சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வயதானவர்கள்,  உணவு தேவையை எதிர்பார்த்திருப்போர் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். 

ஸ்விக்கி, சொமேட்டோ

இது குறித்து தமிழ்நாடு உணவு மற்றும் இதர பொருட்கள் விநியோகிக்கும் ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு ஒன்றைவெளியிட்டுள்ளது. அதில்  தமிழகத்தில் உள்ள SWIGGY ஊழியர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபடுவதென முடிவெடுத்து உள்ளோம்.  கடந்த ஒரு வருடமாக பல்வேறு போராட்டங்கள், ஆர்பாட்டங்கள் இயக்கங்கள் நடத்தி கோரிக்கை மனுக்களை  நிர்வாகத்திற்கு அளித்துள்ளோம். இதுவரை பேச்சு வார்த்தைகளோ அல்லது கோரிக்கை மீது தீர்வு காண முற்படவில்லை. இதனால் வேறு வழியின்றி இன்று மே 22ம் தேதி முதல்  வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என  சங்க பேரவை கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளோம். அதேநேரம், இந்த வேலை நிறுத்தத்தில் ஸ்விக்கி நிறுவனத்தை சேர்ந்த  ஒரு தரப்பினர் பணிக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  


ஊழியர்களின் கோரிக்கைகள்:


ஸ்விக்கியில் பணிபுரியும்  அனைத்து ஊழியர்களுக்கும் பழைய Pay-out முறையை வழங்க வேண்டும்.  புதிய ஸ்லாட் முறையை திரும்ப பெற வேண்டும். குறைந்தபட்சம் ஒரு ஆர்டருக்கு மினிமம் ரூ30ம்,  ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.10 வழங்க வேண்டும்.  அதே போல்  பேட்ச் ஆர்டருக்கு ரூ.20 வழங்க வேண்டும்.காத்திருப்பு கட்டணத்தை  தனியாக வழங்க வேண்டும். Swiggy order ஐ Swiggy DE களுக்கு மட்டுமே கொடுக்கவேண்டும்.  Firstmile ஆர்டருக்கு முழுமையான கட்டணத்தை வழங்க வேண்டும். முறையான காரணம் இல்லாமல் அபராதம் விதிக்கக்கூடாது.  உணவகங்களில்  உணவு ரெடியாகும் முன்பே உணவு ரெடி என்று கொடுத்துவிட்டு நீண்ட நேரம் கழித்து உணவு கொடுப்பதை சரி செய்ய வேண்டும்.

ஸ்விக்கி

 உணவகங்களில் உணவு இல்லை என்றால் ஆர்டர் Rejected போடாமல் கேன்சல் மட்டுமே செய்யப்பட வேண்டும். . உணவகங்களில் DE களுக்கு வாகனம் நிறுத்தும் வசதி ஏற்பாடு செய்து தர வேண்டும்.  தினமும் குறைந்தது 5 rejectகளுக்கு அனுமதி வழங்கவேண்டும். Wrong location தூரத்திற்கு டெலிவரி கொடுத்தவுடன் pay-out வழங்க வேண்டும்.  ரெஸ்பான்ஸ் இல்லை எனில் 15 நிமிடத்திற்குள்  ஆர்டர் கேன்சல் செய்யப்பட வேண்டும். DE களுக்கு விபத்து நடந்தால் சம்பந்தப்பட manager உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட DEகளுக்கு Swiggy செயலில் தேவையான மருத்துவம், Insurance உட்பட அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்பது உட்பட 30 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவைகளை நிறைவேற்றக்கோரி, ஸ்விக்கி நிறுவன ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web