ஸ்விக்கி, ஜொமேட்டோ ஒவ்வொரு டெலிவரிக்கும் போனஸ்.... ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை முறியடிக்க அதிரடி! !

 
ஸ்விக்கி

ஊதிய உயர்வு, பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெலிவரி ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்க உள்ள நிலையில், இந்த போராட்டம் டெலிவரி சேவையை பாதிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது. பல முக்கிய நகரங்களில் உணவு மற்றும் இன்ஸ்டன்ட் டெலிவரி பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

ஸ்விக்கி, சொமேட்டோ

டெலிவரி சேவை இந்தியாவில் பெரிய தொழிலாக மாறியுள்ள நிலையில், கடந்த சில காலமாக ஊதியம் குறைந்து வருவதாக ஊழியர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். தன்னிச்சையான பணிநீக்கங்களும் அதிகரிப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இதனை எதிர்த்து தெலங்கானா கிக் பணியாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

ஸ்விக்கி

போராட்டத்தை சமாளிக்க டெலிவரி நிறுவனங்கள் கூடுதல் ஊக்கத் தொகையை அறிவித்துள்ளன. ஜொமேட்டோ நிறுவனம் இன்று மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ஒரு ஆர்டருக்கு ₹120 முதல் ₹150 வரை வழங்க முடிவு செய்துள்ளது. ஸ்விக்கி நிறுவனம் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய நாட்களில் வேலை செய்யும் ஊழியர்கள் ₹10,000 வரை சம்பாதிக்கலாம் என அறிவித்துள்ளது. பண்டிகை கால தேவையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!