சிட்னி தாக்குதல் எதிரொலி... பிரிட்டன் முழுவதும் யூத வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு !

 
சிட்னி
 

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை யூதர்களின் ஹனுக்கா பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் எதிரொலியாக, பிரிட்டன் முழுவதும் உள்ள யூத வழிபாட்டுத் தலங்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சிட்னியில் இரண்டு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டனர்; 2 காவல்துறை அதிகாரிகள் உட்பட 29 பேர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து லண்டன் பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பெருநகரின் யூத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் யூத சமுதாய மையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாங்கள் பாதுகாப்பை அதிகரித்துள்ளோம். மேலும், இந்தப் பகுதிகளில் கூடுதலாக ரோந்துப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம். வரும் நாள்களில் நடைபெறவுள்ள ஹனுக்கா பண்டிகை கொண்டாட்டங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த யூத சமூகத்தினருடன் இணைந்து செயல்படுகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு பிரிட்டன் பிரதமர் கியொ ஸ்டார்மர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். "போண்டி கடற்கரையில் நடந்தது யூதர்களுக்கு எதிரான வெறுப்புணர்வில் செய்யப்பட்ட பயங்கரவாதச் செயல் என்பது மிகவும் அருவருப்பானது. பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். ஆஸ்திரேலியா மற்றும் யூத சமூகத்தினருக்கு பிரிட்டன் எப்போதும் துணையாக நிற்கும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஹனுக்கா நிகழ்வுகளுக்குப் பாதுகாப்பு அளிப்பது குறித்து சமூகப் பாதுகாப்பு அறக்கட்டளையுடன் இணைந்து தீவிரமாகப் பணியாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!