டி 20 போட்டி : இன்று பாகிஸ்தான்–இலங்கை மோதல்!
பிப்.7 முதல் மார்ச்.8 வரை இந்தியா, இலங்கையில் டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான தயாரிப்பாக பாகிஸ்தான் அணி இலங்கையில் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று தம்புள்ளையில் நடைபெறுகிறது.

இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இலங்கை அணியை தசுன் ஷனாகா வழிநடத்துகிறார். பதும் நிஷங்கா, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, வனிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷனா, துஷ்மந்த் சமீரா, மதீஷா பதிரானா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சல்மான் அலி ஆகா செயல்படுகிறார். பஹர் சமான், சைம் ஆயுப், நசீம் ஷா, சதாப் கான், முகமது நவாஸ் உள்ளிட்ட வீரர்கள் அணியின் பலமாக உள்ளனர். இந்த தொடரின் இரண்டாவது டி20 ஜன.9-லும், மூன்றாவது டி20 ஜன.11-லும் தம்புள்ளையில் நடைபெற உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
