டி20 உலகக் கோப்பையால் பங்களாதேஷுக்கு ரூ.360 கோடி இழப்பு!
இந்தியா மற்றும் இலங்கையில் வரும் பிப்ரவரி 7ம் தேதி தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் வங்காளதேச அணி பங்கேற்காது என்பது தற்போது உறுதியாகியுள்ளது.
வங்காளதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை சம்பவங்களைக் கண்டித்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியில் இடம்பெற்றிருந்த முஸ்தபிசுர் ரகுமானை விடுவிக்க வேண்டும் என்று பிசிசிஐ உத்தரவிட்டது. இதைக் கண்டித்த வங்காளதேச அரசு, ஐபிஎல் ஒளிபரப்பிற்குத் தடை விதித்ததோடு, பாதுகாப்பு காரணங்களைக் கூறி உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடத் தனது அணியை இந்தியாவுக்கு அனுப்ப மறுத்தது.

தங்களது ஆட்டங்களை மட்டும் இலங்கைக்கு மாற்ற வேண்டும் என வங்காளதேசம் கோரியது. ஆனால், ஐசிசி இதனை நிராகரித்து, இந்தியா பாதுகாப்பான நாடு என்பதற்கான ஆதாரங்களை வழங்கியது. வங்காளதேசம் தனது முடிவில் பிடிவாதமாக இருந்ததால், ஐசிசி அந்த அணியை உலகக் கோப்பையிலிருந்து நீக்கியது. வங்காளதேசத்திற்குப் பதிலாக, தரவரிசையில் அடுத்த இடத்தில் இருந்த ஸ்காட்லாந்து அணி குரூப் 'சி' பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பையில் பங்கேற்காததால், ஐசிசி வழங்க வேண்டிய சுமார் ரூ.360 கோடி ($27-30 மில்லியன்) வருவாயை வங்காளதேசம் இழக்க நேரிடும். இது அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு வருமானத்தில் 60% ஆகும். ஐசிசியின் 'உறுப்பினர் பங்கேற்பு ஒப்பந்தத்தை' மீறியதற்காக, வங்காளதேசத்திற்கு சுமார் ரூ.18 கோடி ($2 மில்லியன்) வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்தியாவுடனான கிரிக்கெட் உறவு பாதிக்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் நடைபெற வேண்டிய பல கோடிக்கணக்கான வருவாய் தரக்கூடிய இருதரப்புத் தொடர்கள் ரத்து செய்யப்படலாம். உலகக் கோப்பை போன்ற பெரிய மேடையில் விளையாடாததால், வீரர்களுக்கான ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள் மற்றும் விளம்பர வருவாயிலும் பெரும் சரிவு ஏற்படும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
