டி20 உலகக் கோப்பை... ரஷீத் கான் கேப்டன்… ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
இந்தியா, இலங்கையில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெறும் இந்தத் தொடரில் ரஷீத் கான் கேப்டனாகவும், இப்ராஹிம் ஜத்ரான் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த உலகக் கோப்பையில் அரையிறுதி வரை முன்னேறிய ஆப்கானிஸ்தான் அணியிடம் இந்த முறையும் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
காயத்தில் இருந்து மீண்ட வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக் மற்றும் ஆல் ரவுண்டர் குல்பதின் நைப் மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளனர். இவர்களின் வருகை அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என்று தேர்வுக் குழு தெரிவித்துள்ளது. சுழற்பந்து வீச்சில் ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், நூர் அஹ்மத் ஆகியோர் முக்கிய ஆயுதமாக இருப்பார்கள்.
இந்த உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் தனது முதல் போட்டியை பிப்ரவரி 8-ம் தேதி சென்னையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடவுள்ளது. வலுவான பந்துவீச்சும், இளம் பேட்டிங் வரிசையும் இந்த அணியின் பலமாக பார்க்கப்படுகிறது. இந்த முறை கோப்பையை கைப்பற்றும் கனவுடன் ஆப்கானிஸ்தான் களமிறங்குகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
