T20 இந்திய பெண்கள் அணி அறிவிப்பு... ஏப்ரல் 17ல் தென் ஆப்பிரிக்காவுடன் மோதல்!
ஐபிஎல் 2026 திருவிழா ஒருபுறம் களைகட்டத் தயாராகி வரும் நிலையில், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. ஏப்ரல் 17-ஆம் தேதி தொடங்கும் இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக, 15 பேர் கொண்ட பலமான அணியைப் பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது. ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில் அனுபவம் மற்றும் இளமை கலந்த கலவையாக இந்திய அணி களமிறங்குகிறது.
இந்தத் தொடரில் உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அசத்திய இளம் வீராங்கனைகள் காஷ்வி கவுதம் மற்றும் அனுஷ்கா சர்மாவுக்கு முதல்முறையாக இந்திய டி20 அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுடன் நட்சத்திர வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா, ஷெபாலி வர்மா, ஜெமிமா ரொட்ரிக்ஸ் மற்றும் தீப்தி சர்மா ஆகியோரும் அணியில் இடம்பெற்று வலுசேர்க்கின்றனர்.

டர்பன், ஜொஹன்னஸ்பர்க் மற்றும் பெனோனி ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. ஏப்ரல் 17-ல் தொடங்கி 27-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில், தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை இந்தியப் பெண்கள் எவ்வாறு சமாளிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்திய வீராங்கனைகள் தங்களது அதிரடி ஆட்டத்தால் தொடரைக் கைப்பற்றுவார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
