‘தாரே ஜமீன் பர்’ பட நடிகை, நடன கலைஞர் மரணம்! இந்தி திரையுலகினர் இரங்கல்!

 
லலிதா லஷ்மி

‘தாரே ஜமீன் பர்’ படத்தில், நடிகர் அமீர்கானுடன் கலை ஆசிரியராக நடித்த நடிகை லலிதா உடல்நலக் குறைபாடு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 90. நடிகை லலிதா மரணமடைந்த செய்தியை ஜஹாங்கிர் நிக்கல்சன் கலை அறக்கட்டளை உறுதி செய்துள்ளது. 

லலிதா லஷ்மி

தனது யதார்த்தமான நடிப்பு திறமையாலும், தேர்ந்த கலைஞராகவும் இந்தி ரசிகர்களிடையே என்றென்றும் நினைவுக்கூரப்படுபவராக நடிகை லலிதா இருப்பார் என்று இந்தி திரையுலகினர் தங்களது இரங்கல் செய்தியில் தெரிவித்து வருகின்றனர். நடிகை லலிதாவின் மரணம் குறித்து ஜஹாங்கீர் றக்கட்டளை வெளியிட்ட செய்திக் குறிப்பில் “கலைஞர் லலிதா லஜ்மியின் மறைவுச் செய்தியால் மிகவும் வருத்தம் அடைகிறோம். அவர்  கிளாசிக்கல் நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவரது கலைப்படைப்பான ‘டான்ஸ் ஆஃப் லைஃப் அண்ட் டெத்’  என்றென்றும் ரசிகர்களால் நினைவு கூரப்படும்.  இவரது படைப்புக்கள் நம்முடைய வாழ்வில் உத்வேகம் அளிக்க வல்லவை.

லலிதா லஷ்மி

பிற்கால படைப்புகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மறைக்கப்பட்ட பதற்றத்தை எடுத்துக் காட்டின. லலிதா இந்தியாவின் மிகப் பழமையான பெண் கலைஞர் மற்றும் அச்சு தயாரிப்பாளர். இவர் இந்தியாவின் கலை வரலாற்றில் ஒரு வரையறுக்கப்பட்ட முத்திரையை விட்டுச் செல்கிறார் எனத் தெரிவித்துள்ளது. அவரின் மறைவிற்கு பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், சக கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web