ஆசிரியர்களுக்கு டேப்லட், வெளிநாடு சுற்றுலா!! முதல்வர் அதிரடி!!

 
முதல்வர் ஆசிரியர்கள்

தமிழகத்தில் அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்தவும், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது தமிழகம் முழுவதும்  அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு டேப்லட் வழங்கவும், வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்லவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

ஆசிரியர்கள் கூட்டம்
 இது குறித்து பள்ளி கல்வித்துறை  செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழக  முதல்வர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பள்ளி கல்வித்துறையில் புதிதாக 4 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் அனைத்தும் ஆசிரியர், ஆசிரியைகளின் நலனை காக்கும் வகையில் செயல்படுத்தப்படும். தொடர்ந்து  மாணவர்களின் நலனுக்காக ஆசிரியர்களின் நலன் பேணவும், அவர்களின் சேவையை பாராட்டும் வகையிலும் இந்த புதிய திட்டங்களை வகுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இந்த டேப்லட் மூலம் ஆசிரியர்கள் தங்களுக்கான கற்றல், கற்பித்தல் முறையை மேம்படுத்திக் கொள்ளலாம்.  

தமிழக அரசு

அத்துடன் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனையும் செய்யப்படும்.  3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக உயர்லகல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி செலவை ரூ.50000 வழங்கவும்  முடிவு செய்யப்பட்டுள்ளது. 4 வதாக அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவர்களிடம் சிறப்பாக எடுத்து செல்லும் ஆசிரியர்களை பாராட்டும் வகையிலும், அவர்களின் சேவையை ஊக்குவிக்கும் வகையிலும்  ஆசிரியர்களை வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டங்களுக்காக  ரூ.225 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக  பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web