“கச்சத்தீவை 99 வருஷ குத்தகை எடுங்க”... பிரதமர் மோடிக்கு விஜய் முக்கிய கோரிக்கை!

இந்திய பிரதமர் மோடி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் தவெக தலைவர் விஜய் அவருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையில் கச்சத்தீவு விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
— TVK Vijay (@TVKVijayHQ) April 4, 2025
அந்த பதிவில் ”கச்சத்தீவு விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண வேண்டும். இதற்கு இடைக்கால நிவாரணமாக இலங்கை அரசுடன் கச்ச தீவை பெற 99 வருடங்கள் குத்தகை வாங்க வேண்டும். கச்சத்தீவை மீட்பது மட்டும்தான் தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு ஒரே தீர்வு. ஐநா கடல்சார் விதிகளை கண்டிப்பாக இலங்கை அரசு கடைபிடிக்க வேண்டும்.
கடந்த 1974 ம் ஆண்டு கச்சத்தீவு கைவிட்டு போவதற்கு காரணம் ஆட்சி அதிகார பசி கொண்ட அன்றைய திமுக அரசு தான். கடந்த 1999 முதல் 2014 வரை திமுக அரசால் தான் அப்போதைய மத்திய அரசுகள் இயங்கியது. அப்போதெல்லாம் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க முயற்சிக்கவில்லை. இப்போது தனி தீர்மானம் நடத்தி கண்துடைப்பு நாடகம் செய்கிறார்கள்.
இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் இதுவரை 800-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அவர்களின் உடைமைகள் பறிக்கப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குஜராத் போன்ற மற்ற மாநிலங்களில் மீனவர்களின் நலனில் மத்திய அரசு பாதுகாப்பாக இருக்கும் நிலையில் எங்கள் மீனவர்களின் நலனில் மட்டும் கண்டுகொள்ளாமல் இருப்பதா.? மேலும் இலங்கை செல்லும் பிரதமர் மோடி கச்சத்தீவு இந்தியாவின் உரிமை நிலம் என்ற பயணத் திட்டத்தை முன்வைக்க வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!