குடை எடுத்திட்டு கிளம்புங்க!! இன்று 17 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை!!

 
மழை

தமிழகத்தின் பல பகுதிகளில்  4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இந்த மழை மேலும் 4 நாட்களுக்கு தொடரும் என  சென்னை  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து  வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்  தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  

இதன்படி  கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, தென்காசி, திருச்சி, கரூர், ராணிப்பேட்டை, நாமக்கல், ஈரோடு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், நீலகிரி  மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இன்று மார்ச் 25ம் தேதி சனிக்கிழமை  தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன்  மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!! மிக கன மழை எச்சரிக்கை!!


அதன்படி கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நாளை ஞாயிற்றுக்கிழமை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்  லேசானது முதல்  மிதமான மழை  பெய்யக்கூடும்  நாளை மறுநாள் மார்ச் 27ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமானது வரை  மழை  பெய்யக்கூடும் .

மழை
மார்ச் 27 மற்றும் மார்ச் 28ம் தேதி தமிழகம்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை  மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை   பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web