சென்னைட்டீஸ் நோட் பண்ணிக்கோங்க... இன்றும் நாளையும் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

 
மெட்ரோ ரயில் நிலையங்களில் மினி பஸ் சேவை: மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தின் தலைநகர் சென்னையின் பொது போக்குவரத்து சேவைகளில் முக்கியமானவை மெட்ரோ ரயில்கள். இவை தொடங்கப்பட்ட போது கூட்டமே இல்லை. மக்கள் மின்சார ரயில்களிலும், பேருந்துகளிலும் தான் பயணம் செய்து வந்தனர். சில நாட்களிலேயே  மெட்ரோ ரயில்கள் பிக்கப் ஆக தொடங்கி விட்டன. 

மெட்ரோ ரயில்

தற்போது தினமும் லட்சக்கணக்கானோர் அலுவலகம் , பள்ளி, கல்லூரிகளுக்கு என செல்லத் தொடங்கியுள்ளனர்.  இந்நிலையில் பராமரிப்பு பணிகளுக்காக சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி  இன்று பிப்ரவரி 22ம் தேதி சனிக்கிழமை இரவு 10 மணி முதல் பிப்ரவரி 23ம் தேதி காலை 6 மணி வரை விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

மெட்ரோ

விம்கோ நகர் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து  மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  

'விம்கோ நகர் ரயில் நிலையத்தில் திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று பிப்ரவரி 22ம் தேதி  இரவு 10 மணி முதல் நாளை பிப்ரவரி 23ம் தேதி காலை 6 மணி வரை நீல வழித்தடத்தில் உள்ள விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மட்டும் மெட்ரோ ரயில்கள் சேவை நிறுத்தப்படும் என அறிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web