நோட் பண்ணிக்கோங்க... 2026ல் எப்போதெல்லாம் தொடர்விடுமுறை?.. எந்தெந்த பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருகிறது?!
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களில் மூழ்கியுள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டில் தமிழக அரசு பொது விடுமுறை நாட்களின் பட்டியல் குறித்து தெரிஞ்சுக்கோங்க. 2026ல் மொத்தம் 24 நாட்கள் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தொடர் விடுமுறை தினங்கள் குறித்து தெரிந்துக் கொண்டால், சுற்றுலா, குடும்பத்துடன் சொந்த ஊர் செல்வது போன்றவைகள் குறித்து இப்போதே திட்டமிட்டுக் கொள்ள வசதியாக இருக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் போல் 2026-க்கும் மத மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தினங்கள் அடிப்படையில் அரசு விடுமுறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் தினம், தைப்பூசம், குடியரசு தினம், தெலுங்கு வருடப் பிறப்பு, மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, தமிழ்ப் புத்தாண்டு, ரம்ஜான், மே தினம், பக்ரீத், மொகரம், சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, மிலாது நபி, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் ஆகிய தினங்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில், ஏப்ரல் 1ம் தேதி வணிக மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டும் “ஆண்டு கணக்கு முடிவு” காரணமாக தனிப்பட்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஜனவரி மாதத்தில் 5 விடுமுறைகள் உள்ளன. மார்ச், ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் தலா 3 விடுமுறை நாட்கள் வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தைப்பூசம் மற்றும் தீபாவளி பண்டிகைகள் 2026-ம் ஆண்டில் ஞாயிற்றுக்கிழமையில் வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் ஊழியர்களிடையே சிறிய ஏமாற்றம் நிலவினாலும், பிற விடுமுறைகளின் தொடர்ச்சியான அமைப்பு சிலருக்கு நீண்ட வார இறுதி விடுமுறைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசாணை படி, இந்த விடுமுறைகள் மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள் மற்றும் அரசாங்க அமைப்புகளுக்கு பொருந்தும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
