துறவியான தமன்னா... 'ஒடேலா 2' படத்தின் டீசர் வெளியீடு!

தெலுங்கு திரையுலகில் இயக்குநர் அசோக் தேஜா இயக்கத்தில் 2022ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ஒடேலா நயில் நிலையம். தற்போது இந்த திரைப்படத்தின் 2ம் பாகத்தில் தமன்னா நடித்து வருகிறார். மது கிரியேஷன்ஸ் மற்றும் சம்பத் நந்தி டீம்வொர்க்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு 'ஒடேலா 2' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் டீசர், உத்திரப் பிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் வெளியாகும் என படக்குழு சார்பில் அறிக்கப்பட்டது. திட்டமிட்டபடி இன்று திரிவேணி சங்கமத்தில் 'ஒடேலா 2' படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தமன்னா உட்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் அப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை யுள்ளது. அதில் தமன்னா துறவி கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்பட 5 மொழிகளில் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!