‘மில்கி பியூட்டி’ தமன்னாவின் 'காஸ்ட்லி' டான்ஸ்... 6 நிமிஷ டான்ஸுக்கு ரூ.6 கோடி சம்பளம்!

 
தமன்னா

சினிமாப் படங்களில் ஒரு பாடலுக்கு ஆடவே கோடிகளில் சம்பளம் வாங்கும் நட்சத்திரங்களுக்கு மத்தியில், ஒரு பொது நிகழ்ச்சியில் நடனமாடி அதிக சம்பளம் வாங்கிய நடிகையாகத் தமன்னா உருவெடுத்துள்ளார்.

தமன்னா

கோவாவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற புத்தாண்டு (2026) கொண்டாட்ட நிகழ்ச்சியில் தமன்னா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். புத்தாண்டு நிகழ்ச்சி மேடையில் அவர் சுமார் 6 நிமிடங்கள் மட்டுமே நடனமாடியுள்ளார். இந்த 6 நிமிட ஆட்டத்திற்காக அவருக்கு ரூ.6 கோடி சம்பளமாக வழங்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஒரு நிமிடத்திற்கு 1 கோடி ரூபாய். இதன் மூலம் இந்தியாவில் ஒரு கலை நிகழ்ச்சியில் மிகக் குறுகிய நேரத்தில் அதிக சம்பளம் வாங்கிய நடிகை என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

ஜெயிலர்

கடைசியாகத் தமிழில் 'அரண்மனை-4' படத்தின் வெற்றிக்குப் பிறகு, தமன்னா தற்போது இந்திப் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கோவாவில் அவர் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக 'காவாலா' போன்ற அவரது சூப்பர் ஹிட் பாடல்களுக்கு அவர் நடனமாடியது ரசிகர்களைக் கவர்ந்தது. திரைப்படங்கள் மட்டுமின்றி, ஓடிடி தளங்களிலும் முன்னணி நடிகையாகத் தமன்னா வலம் வருகிறார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!