கடையை அடித்துநொறுக்கிய பெண் விஏஓ !! தெறித்து ஓடிய கடை உரிமையாளர்கள்!!

 
கலைவாணி

திருச்சி கள்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் பெண் வி.ஏ.ஓ கலைவாணி. இவர் தற்போது ஸ்ரீரங்கத்தில் வி.ஏ.ஓவாக பணிபுரிந்து வருகிறார். கலைவாணி பத்து நாட்களுக்கு முன்பு திருச்சி காந்தி மார்க்கெட் MAJ traders என்னும் கடையில் புளி வாங்கி சென்றதாக தெரிகிறது. பின்னர்  அது சரியில்லை எனக்கூறி வியாபாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கலைவாணி

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பெண் விஏஓ வாங்கிய பொருட்களை கடை மீது வீசி எறிந்தார். இந்த செயல் கடையில் வேலை பார்த்தவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. பின்னர் கடையில் பணியில் இருந்த பெண்கள் விஏஒவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை கீழே தள்ளி தாக்கியதாக தெரிகிறது.

இதனைத்தொடர்ந்து கலைவாணி தனது உறவினர்களுக்கு உடனே  தகவல் தெரிவித்தார். இதனையடுத்து கலைவாணியின் உறவினர்கள் 10-க்கும் மேற்பட்டோர் சந்தைக்கு சென்று, கடை வியாபாரி மற்றும் பெண் ஊழியரை தாக்கி கடையை சேதப்படுத்தியுள்ளார். இரு தரப்பினரும் மோதிக்கொண்டதால் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருச்சி காந்தி மார்க்கெட் போலீசார் மோதல் குறிம்து விசாரணை மேற்கொண்டனர்.

கலைவாணி

மேலும் இது தொடர்பாக காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில்  கடை உரிமையாளர் சாதிக்பாஷா புகார் அளித்துள்ளார். வி.ஏ.ஓ  கலைவாணி மற்றும் கடையை சூறையாடிய உறவினர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வியாபாரிகளை அச்சுறுத்தும் இது போன்ற அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். விஏஓ  பதவியை தவறாக  பயன்படுத்தும் இது போன்ற அதிகாரிகளை  உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்  என  அப்பகுதி வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

  

From around the web