கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு தாம்பரம்–நெல்லை சிறப்பு ரயில்!

 
எக்ஸ்பிரஸ் ரயில்
 

கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் – நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. டிசம்பர் 25ல் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்ப வசதியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ரயில் எக்ஸ்பிரஸ்

டிசம்பர் 28 மற்றும் ஜனவரி 4 ஆகிய தேதிகளில் நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இரு நாட்களிலும் இரவு 11.30 மணிக்கு நெல்லையில் புறப்படும் ரயில், மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரம் வந்து சேரும். இந்த ரயில் மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக செல்கிறது.

ஊட்டி மலை ரயில் ரத்து!!

மறு வழியில் டிசம்பர் 29 மற்றும் ஜனவரி 5 தேதிகளில் தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு ரயில் புறப்படும். மறுநாள் அதிகாலை 4 மணிக்கு நெல்லை சென்றடையும். இந்த நான்கு சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிமுதல் தொடங்கியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!