நிலவிலிருந்து பார்த்தாலும் ”தமிழ்”!! 100 ஏக்கரில் தமிழ் காடுகள்?!

 
தமிழ்

சட்டமன்ற கூட்டத்தொடரில் பல்வேறு எதிர்கால திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நிலவில் இருந்து பார்த்தாலும் தமிழ் எனத் தெரியும் வகையில் மாதிரி காடு தமிழகத்தில் உருவாக்கப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். இவரின் இந்த அறிவிப்பு  சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.  கல்தோன்றி மண் தோன்றா காலத்தே மூத்த மொழி எங்கள் தமிழ் மொழி என்பது பழமொழி.

தமிழ்

அதனை உலகுக்கு எடுத்துக் காட்டும் வகையில் இந்த மாதிரி காடுகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழத்தில் சுற்றுச்சுழலை மேம்படுத்தவும் விவசாயத்தை ஊக்குவிக்கவும் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக  பசுமை தமிழகம் திட்டத்தின் மூலம் வனப்பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பசுமை சைதை திட்டத்தின் மூலம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அப்பகுதி முழுவதும் பசுமையாக மாற்றி இருப்பதாகவும், பள்ளி கல்வி துறை அமைச்சர் பசுமை பள்ளிகளை உருவாக்கி  வருகிறார் எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்

இதே போல் உள்ளாட்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி 70 லட்சம் மரங்களுக்கு 275 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இதே போன்று உணவுத் துறை அமைச்சர், சபாநாயகர் பனை விதைகளையும்  வழங்கியுள்ளார். இது போன்று மரம் வளர்ப்பதில் முன்னோடியாகவும், பொதுமக்களுக்கு முன்னுதாரணமாகவும் திகழ்ந்து வருகின்றனர்.இதனை பின்பற்றி பொதுமக்களும்  பூமிக்கு மனதார மரங்களை தானமாக கொடுங்கள் எனக் கூறியுள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web