தமிழ் எங்கள் உணர்வின் வெளிப்பாடு... முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி!

 
ஸ்டாலின் கடிதம்

 மத்திய அரசு தமிழகத்தில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனை அமல்படுத்தும் வரை கல்விக்கான நிதியை விடுவிக்க முடியாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதற்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் தலைவர்கள் பொதுமக்கள் எதிர்ப்புக்களையும், கண்டனங்களையும் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் நாளை அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார். இதுகுறித்து ஸ்டாலின்  தென்னிந்திய மாநிலங்களில் இந்தி கற்றுக் கொள்ள 6,000 மையங்களுடன் இந்தி பிரச்சார சபா உள்ளது, அதேபோல்  வட இந்தியாவில் தென்னக மொழி ஒன்றை கற்றுக்கொள்ளத்தர சபா உள்ளதா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

ஸ்டாலின் அமைச்சரவை கூட்டம்

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனின் பிறந்தநாள் வாழ்த்தை சுட்டிக்காட்டி முரசொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், பாஜக நிர்வாகியான அன்பு சகோதரி தமிழிசை சௌந்தரராஜன் எனக்கு மும்மொழியில் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துப் பதிவிட்டிருந்தார். தமிழ், ஆங்கில வாழ்த்துக்குப் பிறகு, தெலுங்கு மொழியில் வாழ்த்தியிருக்கிறார். அதில் இந்தி இடம்பெறவில்லை, அதுதான் தமிழ்நாட்டில் நிலவுகிற உணர்வின் வெளிப்பாடு. 

ஸ்டாலின்

தமிழிசை சௌந்தரராஜன், தெலுங்கு மொழியைப் பள்ளிப் பருவத்திலேயே படித்து தெரிந்துகொள்ளவில்லை. தெலங்கானாவில் பணிபுரிந்த  போது கற்றுக் கொண்டார். இதிலிருந்தே மூன்றாவதாக ஒரு மொழியை வலிந்து படிக்க வேண்டியதில்லை என்பதையும், தேவைப்படுகிறவர்கள் புரிந்து கொண்டு பயன்படுத்த முடியும் என்பதையும் பிறந்த நாள் வாழ்த்துப்பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார் சகோதரி தமிழிசை. அவருக்கு என் நன்றி என குறிப்பிட்டுள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web