தமிழ்நாடு அஜித்குமார் கழகம் ... ரசிகர்கள் பரபரப்பு போஸ்டர்!

 
தமிழ்நாடு அஜித்குமார் கழகம்
தமிழ் சினிமாவில் தல ஆக கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் அஜீத் குமார்.  இவர் கார் ரேசராகவும் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.   நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் அஜித்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்ட நிலையில் குடியரசுத் தலைவரிடம் இருந்து விருதினை  பெற்றுக் கொண்டுள்ளார்.  

இந்நிலையில் நடிகர் அஜித் எனக்கு அரசியலில் உடன்பாடு கிடையாது.   சில நடிகர்கள் அரசியலில் வர ஆர்வம் காட்டலாம் அவர்கள் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் எனக் கூறியிருந்தார்.  கோயம்பேடு பகுதியில் தற்போது நடிகர் அஜித்தின் ரசிகர்கள் தமிழ்நாடு அஜித்குமார் கழகம் என்ற பெயரில் அஜித் புகைப்படத்துடன் ஒட்டிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியது.  அதன்படி நடிகர் அஜித் அரசியலுக்கு கட்சியை தொடங்குவார் என்ற விதத்திலும் கட்சிக்கு தமிழ்நாடு அஜித்குமார் கழகம் என பெயர் வைப்பார் என்ற விதத்திலும் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் தனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை எனவும் சக நண்பர்கள் அரசியலில் இறங்கியுள்ளனர்.  அவர் நடிகர் விஜய்யை மறைமுகமாக குறிப்பிட்ட நிலையில் தற்போது நடிகர் அஜித் அரசியலுக்கு வருவார் என்ற கோணத்தில் இந்த போஸ்டரை ஒட்டி உள்ளனர். விஜய் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் அஜித்தை தங்கள் பக்கம் இழுக்க திமுக, அதிமுக மற்றும் பாஜகவில் உட்பட  கட்சிகள் போட்டி போடுவதாக கூறப்படும் நிலையில் இப்படி ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?