மார்ச் முதல் வாரத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு?!

 
தேர்தல்
 

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் இறுதி வாக்காளர் பட்டியல் 2026 பிப்ரவரி 7ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் கவனமாக கண்காணித்து வருகின்றன.

இறுதிப் பட்டியல் வெளியான பிறகு பிப்ரவரி மாதத்தின் இரண்டாம் பாதியில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக் குழு தமிழகம் வர உள்ளது. அப்போது அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் பாதுகாப்பு, தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. தேர்தல் பணிகள் வேகமெடுக்க உள்ளன.

இதற்கிடையே மார்ச் முதல் வாரத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் 2026 மே 10ஆம் தேதி முடிவடைகிறது. அதற்கு முன்பாக புதிய அரசு அமைக்க வேண்டும் என்பதால், ஏப்ரல் மாத விடுமுறை மற்றும் தேர்வுகளை கருத்தில் கொண்டு தேர்தல் தேதி நிர்ணயிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!