ஊக்கமருந்து புகார்… தமிழக வீராங்கனை தனலட்சுமிக்கு 8 ஆண்டு தடை!
ஊக்கமருந்து பயன்படுத்தியதாக தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி சேகருக்கு 8 ஆண்டுகள் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஒருமுறை தடை பெற்ற நிலையில், மீண்டும் ஊக்கமருந்து புகாரில் சிக்கியதால் இந்த கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வட்டாரத்தில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2022 ஆம் ஆண்டு ஊக்கமருந்து பயன்படுத்தியதாக தனலட்சுமிக்கு 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடை முடிந்த பிறகு, கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் மீண்டும் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். இந்த நிலையில், ஜூலை 27 அன்று நடந்த இந்திய ஓபன் தடகளப் போட்டியில் எடுக்கப்பட்ட மாதிரிகள் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்தன.

இரண்டாவது முறையாக குற்றம் உறுதி செய்யப்பட்டதால், 8 ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சியைச் சேர்ந்த தனலட்சுமி தேசிய போட்டிகளில் தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றவர். டோக்கியோ ஒலிம்பிக்கில் 400 மீட்டர் போட்டிக்கு தேர்வாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
