தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது... பட்ஜெட் சிறப்பம்சங்கள் குறித்து ஆலோசனை!

 
அமைச்சரவை

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அடுத்த நிதியாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கை மார்ச் 14 ஆம் தேதி பேரவையில் தாக்கல் செய்யவுள்ள நிலையில், பட்ஜெட்டில் இடம்பெறவுள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஸ்டாலின் அமைச்சரவை கூட்டம்

தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தொழில் துறை, மின்சாரம் உள்ளிட்ட சில முக்கிய துறைகளில் கொள்கை முடிவுகள் எடுக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அதிகாரபூா்வ அறிவிப்பு இன்று வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

தமிழக சட்டப்பேரவை அடுத்த ஆண்டு பொதுத் தோ்தலை எதிா்நோக்கி இருக்கிறது. அத்துடன் அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கையும் இடைக்கால நிதிநிலை அறிக்கையாகவே இருக்கும்.

சட்டசபை அமைச்சரவை

எனவே 16வது சட்டப்பேரவைக் காலத்தில் திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் இறுதி மற்றும் முழுமையான நிதிநிலை அறிக்கை இதுவாகும். இதனால் நிதிநிலை அறிக்கை மீதான எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web