2026ல் தமிழ்நாட்டின் முதல்வர் ... சிவோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள்!

தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக வாக்காளர்கள் விரும்பும் பட்டியலில் முதல்வர் ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார். தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? என சிவோட்டர் நிறுவனம் கருத்துக்கணிப்பில் ஈடுபட்டது. அதன்படி, 2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை பின்னுக்கு தள்ளி தவெக தலைவர் விஜய் 2ம் இடம் பிடித்திருப்பதாக சிவோட்டர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அடுத்த முதல்வர் பட்டியலில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு 27 சதவீதம் பேரும், தவெக தலைவர் 18 சதவீதம் மக்களின் ஆதரவையும் பெற்றுள்ளனர். அதேபோல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முதலமைச்சராக வர வேண்டும் என 9 சதவீதம் மக்கள் விரும்புகின்றனர் என சிவோட்டர் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 2026 சட்டப்பேரவை தேர்தலில் தவெக, திமுக இடையே தான் போட்டி என நடிகர் விஜய் நேற்று ஆருடம் செய்த நிலையில், அது உண்மையாவதுபோல சிவோட்டர் கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!