திட்டக்குடி விபத்தில் உயிரிழந்த 9 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அரசுப் பேருந்து மற்றும் கார்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, நிதியுதவி அறிவித்துள்ளார்.
நேற்றிரவு சுமார் 7.30 மணியளவில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், எழுத்தூர் கிராமம் அருகே இந்த விபத்து நிகழ்ந்தது. திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு விரைவுப் பேருந்தின் முன்பக்க டயர் திடீரென வெடித்ததால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் தடுப்பைத் தாண்டி மறுபக்கத்தில் வந்த இரண்டு கார்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் கார்களில் பயணம் செய்த 5 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் என மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டுத் தான் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக முதல்வர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பின்வரும் நிதியுதவிகளை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு: தலா ரூ.3 லட்சம், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 2 குழந்தைகள் உட்பட 4 நபர்களுக்கு தலா ரூ.1 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உயர்தரமான மற்றும் சிறப்புச் சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவத் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
