இன்று ஊட்டி சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்... 1703 திட்ட பணிகளைத் திறந்து வைக்கிறார்!

ஊட்டியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி புதிய திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து வருகிறார். அதன்படி இன்று காலை நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதில் ஊட்டி எச்.பி.எப். பகுதியில் புதிதாக ரூ.353 கோடியில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மருத்துவ ஊழியர்களுக்கான குடியிருப்பு கட்டிடங்களை திறந்து வைத்து பேசுகிறார்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடக்கும் விழாவில், ரூ.494.51 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 1703 திட்ட பணிகளை திறந்து வைக்கிறார். குறிப்பாக மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் செல்லாமல் காட்டேரியில் இருந்து ஊட்டிக்கு செல்லும் 3வது மாற்றுப்பாதையை திறந்து வைக்கிறார்.
மேலும் ரூ.130.35 கோடி மதிப்பீட்டில் 56 புதிய வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார். மேலும், 15 ஆயிரத்து 634 பயனாளிகளுக்கு ரூ.102.17 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.
நீலகிரி மாவட்டத்தில் இருந்து மாலையில் புறப்பட்டு கோவைக்கு செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கொங்குநாடு கலைக்குழு சார்பில் வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சியை பார்வையிடுகிறார். பின்னர் கடந்த ஆண்டு பெருந்துறையில் நடந்த வள்ளிகும்மியாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று சாதனை படைத்த 16,000 பெண்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குகிறார். இந்த விழா முடிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை 6.35 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு புறப்பட்டு செல்கிறார். அங்கிருந்து இரவு 7.20 மணிக்கு விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!