ஒரே நாளில் 9,801 பேருக்கு அரசுப் பணி - முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்!
இன்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு அரசுத் துறைகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட 9,801 பேருக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார். தமிழக அரசின் பல்வேறு தெரிவு முகமைகள் மூலம் வெளிப்படையான முறையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இந்த ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள். மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிக் கல்வித் துறைக்குத் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள். இவ்விழாவின் மற்றொரு சிறப்பம்சமாக, அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக 'தேர்வுக்களம்' என்ற புதிய கைபேசி செயலியை முதல்வர் அறிமுகப்படுத்தினார்.

இந்தச் செயலி மூலம் டிஎன்பிஎஸ்சி மட்டுமல்லாது, ஒன்றிய அரசின் போட்டித் தேர்வுகள் குறித்த விவரங்கள், பாடத்திட்டங்கள் மற்றும் மாதிரி வினாத்தாள்களை ஒரே இடத்தில் இலவசமாகப் பெற முடியும். மக்களுக்கு அரசுச் சேவைகளை விரைவாகக் கொண்டு சேர்க்கும் 'எளிமை ஆளுமை' திட்டத்தின் கீழ் கூடுதலாக 50 புதிய மின்-சேவைகளை முதல்வர் தொடங்கி வைத்தார். இதன் மூலம் பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகம் போன்ற இடங்களுக்கு அலையாமல் இணையம் வழியாகவே சான்றிதழ்களைப் பெற முடியும்.

அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம்: சென்னை செனாய் நகரில் ரூ.62.50 கோடி மதிப்பீட்டில் 500 தேர்வர்கள் தங்கிப் பயிலக் கூடிய வகையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பயிற்சி மையக் கட்டடத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். அண்ணா நிர்வாகப் பணியாளர் குடியிருப்பு: 3.38 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புகளையும் அவர் திறந்து வைத்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
