பள்ளிவாசல்களுக்கு 8,700 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு | ரமலான் நோன்பு கஞ்சி!

 
ஸ்டாலின் அரிசி நோன்பு ரமலான்

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் வரும் பிப்ரவரி 18 அல்லது 19, 2026 அன்று தொடங்கவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு மொத்தம் 8,700 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். (கடந்த 2024-ல் 7,040 மெட்ரிக் டன் மற்றும் 2025-ல் 7,920 மெட்ரிக் டன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது). இந்தத் திட்டத்திற்காகத் தமிழக அரசுக்கு சுமார் ரூ.20.88 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களுக்கு இந்த அரிசி பிரித்து வழங்கப்படும்.

அரிசி ஆலை

பள்ளிவாசல்களுக்குத் தேவைப்படும் அரிசியைப் பெற்று வழங்க, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உரிய அதிகாரங்களை வழங்கியுள்ளார். பள்ளிவாசல்கள் தங்களுக்குத் தேவையான அரிசிக்கான மொத்த அனுமதிகளை (Bulk Permits) மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து பெற்று, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் அரிசியைப் பெற்றுக்கொள்ளலாம்.

ரமலான்

ரமலான் மாதத்தில் சூரிய உதயம் முதல் மறையும் வரை இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். மாலையில் நோன்பு துறக்கும்போது பள்ளிவாசல்களில் 'நோன்புக் கஞ்சி' காய்ச்சி ஏழை எளிய மக்களுக்கும், நோன்பு இருப்பவர்களுக்கும் விநியோகிக்கப்படுவது வழக்கம். இந்த நோன்புக் கஞ்சி தயாரிப்பிற்குத் தேவையான பச்சரிசியைத் தமிழக அரசே பல ஆண்டுகளாக இலவசமாக வழங்கி வருகிறது.

பிப்ரவரி 18 அல்லது 19ம் தேதி பிறை தெரிவதைப் பொறுத்து ஈகைத் திருநாள் (ரம்ஜான்) மார்ச் 20, 2026 அன்று கொண்டாடப்பட வாய்ப்புள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!