ஊட்டியில் 127வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஊட்டியில் ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் கோடை விழா நடத்தப்படுகிறது. இந்நிலையில் கடந்த மே 3ம் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி, ஊட்டியில் ரோஜா கண்காட்சி நடந்து முடிந்தது.
கோடை விழாவின் முக்கிய நிகழ்வாக, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 127வது மலர் கண்காட்சி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து மலர் அலங்காரங்களை பார்வையிட்ட முதல்வர், கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த மலர் சிம்மாசனத்தில் மனைவி துர்காவுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். அதனை தொடர்ந்து அமைச்சர்கள் சிலரும் மலர் சிம்மாசனத்தில் இருந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
