முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த மாதம் 14ம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த மாதம் 29ம் தேதி வரை பேரவை கூட்டம் நடைபெறும். இந்த பரபரப்பான சூழ்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்கிறார்கள்.
நாளை ஏப்ரல் 17ம் தேதி சென்னை, தலைமை செயலகத்தில் மாலை 6.30 மணிக்கு நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில், தமிழகத்தில் புதிதாக துவங்கப்பட உள்ள தொழில் முதலீடுகள் மற்றும் விரிவாக்கப்பட உள்ள தொழிற்சாலை பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!