முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்... ரஜினி, விஜய், ராகுல்காந்தி வாழ்த்து!

 
ராகுல்காந்தி
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நடிகர் ரஜினிகாந்த், தவெக கட்சி தலைவர் விஜய் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என். ரவி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், "தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதே போல நடிகர் ரஜினிகாந்த், முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "எனது சகோதரரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இந்தியாவின் வளமான பன்முகத்தன்மை, கூட்டாட்சி அமைப்பு மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டில் நாங்கள் தொடர்ந்து ஒன்றாக நிற்கிறோம். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழவும் தமிழக மக்களுக்கு சேவை செய்வதில் தொடர்ந்து வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?