யானைக்கு கரும்பு கொடுத்து மகிழ்ந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் ஊட்டி சென்ற நிலையில், நேற்று மாலை 5.30 மணிக்கு முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு சென்றார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினை ஆதிவாசி மக்கள் பாரம்பரிய இசைக் கருவிகளை இசைத்தபடி நடனமாடி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து அவர், தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் வளாகத்தில் பாகன்கள் குடும்பத்தினருக்கு ரூ.5.06 கோடி செலவில் கட்டப்பட்ட 44 வீடுகள் மற்றும் விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார். மேலும் அங்கு மரக்கன்றுகள் நட்டார்.
அதன் பிறகு லண்டானா, உன்னி செடிகளின் குச்சிகளை கொண்டு வடிவமைக்கப்பட்ட யானைகளின் உருவங்களை பார்வையிட்டார். மேலும் தமிழக வனத்துறை சார்பில் வனச்சரகர்களின் பயன்பாட்டுக்காக ரூ.2 கோடியே 93 லட்சம் மதிப்பிலான 32 புதிய வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வனவிலங்குகள் பாதிக்கப்படாமல் இருக்க தொரப்பள்ளி முதல் தெப்பக்காடு வரை 15 கிலோ மீட்டர் நீளத்துக்கு ரூ.5 கோடியில் முதுமலை வனப்பகுதி வழியாக உயர் அழுத்த மின்சாரம் கொண்டு செல்லும் கேபிள் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து வளர்ப்பு யானைகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கரும்புகள் கொடுத்து மகிழ்ந்தார். பின்னர் எலிபன்ட் விஸ்பெரர்ஸ் என்ற ஆஸ்கார் விருது பெற்ற குறும்படத்தில் நடித்த பொம்பன், பெள்ளியை சந்தித்து பேசி, அவர்களுக்கு பரிசுத்தொகுப்பு வழங்கினார்.
அதைத்தொடர்ந்து வனத்துறை அதிகாரிகளிடம், வளர்ப்பு யானைகள் பராமரிப்பு குறித்து கேட்டறிந்தார். அப்போது அவரது மனைவி துர்கா ஸ்டாலின், ஆ.ராசா எம்.பி. மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!