இன்று 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களைத் தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

 
ஸ்டாலின் மருந்தகம்

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினமான இன்று, தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்களை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். சென்னையில் நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், முதல்வர் மருந்தகங்களை திறந்து வைக்கிறார். இந்த மருந்தகங்களில் குறைந்த விலையில் ஜெனரிக் மற்றும் பிற மருந்து, மாத்திரைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த சுதந்திர தின விழாவின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் ஜெனரிக் மருந்துகளும், பிற மருந்துகளும் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கும் வகையில் முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும் என அறிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் மருந்தகம் அமைக்க பி.பார்ம் அல்லது டி.பார்ம் படிப்பை முடித்து சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களது ஒப்புதலுடன் மருந்தகம் அமைக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூட்டுறவுத்துறை அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் முதல்வர் மருந்தகம் அமைக்க 2,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். அதன்படி, தமிழகத்தில் முதற்கட்டமாக 1,000 மருந்தகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது கூட்டுறவு சங்கம் மூலம் 500 மருந்தகங்களும், தொழில் முனைவோர் மூலம் 500 மருந்தகங்களும் திறக்கப்பட உள்ளது.

இங்கு பிரதமரின் மக்கள் மருந்தகம் உட்பட எந்த மருந்தகங்களிலும் இல்லாத வகையில் மலிவான விலையில் தரமான மருந்துகள் வழங்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மருந்தகம்

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை பாண்டி பஜாரில் கூட்டுறவுத்துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மருந்து விற்பனையை தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர் கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிலும் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?