"தமிழ்நாடு காங்கிரஸ் அழிவின் பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறது" ஜோதிமணி எம்.பி. பகிரங்கக் குற்றச்சாட்டு!

 
ஜோதிமணி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல்பாடுகள் ராகுல் காந்தியின் கொள்கைகளுக்கு நேர் எதிராக இருப்பதாகவும், கட்சி கொஞ்சம் கொஞ்சமாக அழிவை நோக்கிச் செல்வதாகவும் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தனது 'எக்ஸ்' (X) தளத்தில் வேதனை தெரிவித்துள்ளார்.

எந்த ஒரு அரசியல் கட்சியும் தனது நாடாளுமன்ற உறுப்பினரை தேர்தல் பணிகளில் முடக்க நினைக்காது. ஆனால், காங்கிரஸ் கட்சியில் தேர்தல் ஆணையத்திற்கு வாக்குச்சாவடி முகவர் பட்டியலைக் கொடுக்க விடாமல் தடுத்தது மிகுந்த கவலை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மக்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசாமல், கொள்கை ரீதியான அரசியலை முன்னெடுக்காமல், வெறும் கூட்டல் கழித்தல் கணக்குகளை மட்டும் போட்டுக்கொண்டு சிலரின் சுயநலத்திற்காகத் தமிழ்நாடு காங்கிரஸ் அழிவின் பாதையில் செல்வதாகச் சாடியுள்ளார்.

பாஜகவால் தமிழகத்தில் ஒருபோதும் காலூன்ற முடியாது... ஜோதிமணி பேட்டி!

60 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத போதும் கட்சிக் கொடியை ஏந்தி நிற்கும் தொண்டர்களின் உணர்வுகளைத் தலைமை மதிக்கவில்லை என்றும், ராகுல் காந்தியின் கடின உழைப்பிற்குத் தமிழ்நாடு காங்கிரஸ் துரோகம் செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகம் தற்போது மதவாத மற்றும் பிரிவினைவாத சக்திகளிடமிருந்து பேராபத்தை எதிர்நோக்கியுள்ளது. காமராஜர், பெரியார் போன்ற தலைவர்களால் கட்டிக்காக்கப்பட்ட சமூக நீதி மண்ணைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு காங்கிரஸிற்கு உள்ளது. ஆனால், அந்தப் பொறுப்பைத் தலைமை உணர்ந்துள்ளதா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜோதிமணி

மக்கள் பிரச்சினைகளுக்காகச் செய்திகளில் இடம் பெற வேண்டிய காங்கிரஸ் கட்சி, தற்போது தவறான காரணங்களுக்காகவும் உட்கட்சிப் மோதல்களுக்காகவுமே செய்திகளில் அடிபடுவது மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்துவதாக ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் கோஷ்டி பூசல்கள் அதிகரித்து வரும் நிலையில், ராகுல் காந்திக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் ஜோதிமணி எம்.பி.யின் இந்தப் பதிவு மாநிலத் தலைமைக்கு விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!