இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

 
ரேஷன் கடை

இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தெரியாம பொருட்களை வாங்க ரேஷன் கடைக்கு சென்று ஏமாற்றத்தோடு திரும்பாதீங்க.

தமிழகத்தில் ரேஷன் கடைகளின் மூலமாக பொதுமக்களுக்கு மலிவு விலையில் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வரப்படுகிறது. இதன் காரணமாக ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பயன் பெறுகிறார்கள். மத்திய அரசின் நிதியுதவியுடன் இலவசமாகவும் அரிசி உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வரப்படுகிறது.

ரேஷன் சர்க்கரை

இந்நிலையில் இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் பரிசு தொகுப்புகளை பொங்கல் தினத்திற்கு முன்னதாகவே வழங்குவதற்காக ஜனவரி 10ம் தேதி ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டு வேலை நாளாக அறிவிக்கப்பட்டது.

ரேஷன்

இந்த விடுமுறையை ஈடு செய்வதற்காக இன்று பிப்ரவரி 22ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web