கவிஞர் நந்தலாலா உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி!

 
நந்தலாலா

கவிஞர் நந்தலாலா உடலுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க துணைத் தலைவராகவும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்து வந்த  பிரபல பட்டிமன்ற பேச்சாளர் கவிஞர் நந்தலாலா (69) உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் காலமானார். 

நந்தலாலா

அவரது உடல் ஆம்புலன்சில் திருச்சி கருமண்டபத்தில் உள்ள உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு குடும்பத்தினர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் மறைந்த கவிஞர் நந்தலாலா உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, மெய்யநாதன் உடனிருந்தனர்.

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் துணைத்தலைவராகவும், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர். தலைசிறந்த கவிஞர் - பட்டிமன்ற பேச்சாளர் நந்தலாலா உடல்நலக்குறைவால் மறைவுற்ற நிலையில், திருச்சி கருமண்டபத்தில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்று நந்தலாலாவின் திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.

நந்தலாலா

தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மீது பெரும் பற்று கொண்டவர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது மதிப்பும் - மரியாதையும் கொண்ட பண்பாளர். திரு.நந்தலாலா அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தார், நண்பர்கள், த.மு.எ.க.ச தோழர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்தோம். கவிஞர் நந்தலாலா அவர்கள் மறைந்தாலும், அவரது பணிகள் என்றும் நிலைத்திருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?