சபரிமலை யாத்திரையில் தமிழக பக்தர் மயங்கி சரிந்து விழுந்து பலி!

 
சபரிமலை
 

கர்த்திகை மாத யாத்திரையால் சபரிமலையில் நாள் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில், கோவையைச் சேர்ந்த முரளி (வயது 50) என்ற பக்தர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட தகவலின்படி, அவர் மாரடைப்பால் மரணித்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனுடன், இந்த சீசனில் மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்த பக்தர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

சபரிமலை கூட்டம்

நவம்பர் 16-ஆம் தேதி நடை திறக்கப்பட்டதிலிருந்து சபரிமலை யாத்திரை வேகம் பெற்றுள்ளதோடு, முதல் நாளிலேயே 50,000-க்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்ய வந்தனர். ஆன்லைன் புக்கிங் மூலம் கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டாலும் ஸ்பாட் புக்கிங் அதிகரித்ததால் சில நாட்களில் நெரிசல் தீவிரமடைந்தது. இதில் முன்சிலராக ஒரு பெண் பக்தர் உயிரிழந்ததும் நினைவிற்குரியது. மூச்சுத்திணறல், நெரிசல் காரணமாக சிறுவர்கள், பெண்களும் அவதிப்பட்டதாக தொடர்ந்து  புகார்கள் எழுந்தன.

சபரிமலை

இதனைத் தொடர்ந்து, தேவசம்போர்டு புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தி, ஸ்பாட் புக்கிங்கை 20,000-ல் இருந்து 5,000 ஆக குறைத்து கூட்டநெரிசலை தணிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஆயினும் பக்தர்கள் தொடர்ச்சியாக அதிகரிக்கும் நிலையில், யாத்திரை இடையே ஏற்பட்ட இந்த மரணம் மீண்டும் பாதுகாப்பு, சுகாதார ஏற்பாடுகள் குறித்து கேள்விகளைக் கிளப்பியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!