12 தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது!

 
மீனவர்கள் ராமேஸ்வரம் போராட்டம்

தமிழ்நாடு மீனவர்கள் மீண்டும் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். தனுஷ்கோடி–தலைமன்னார் இடையே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் பகுதியைச் சேர்ந்த 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்கள் சென்ற ஒரு விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

மீனவர்கள்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் மீனவர் குடும்பங்களில் கவலை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களை விரைவில் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!