தமிழ்நாடு அரசின் புத்தொழில் ஆதார நிதித் திட்டம்... விண்ணப்பங்கள் வரவேற்பு!

 
 தலைமை செயலகம்

தமிழ்நாட்டில் தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவும் விதமாக, தமிழ்நாடு அரசின் புத்தொழில் ஆதார நிதித் திட்டத்தின் (TANSEED) 8-வது பதிப்பிற்கான விண்ணப்பங்கள் பெறப்படுவதாகத் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (StartupTN) அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம், புத்தாக்கச் சிந்தனையுடன் செயல்படக்கூடிய புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி மற்றும் ஆதரவு வழங்கப்படுகிறது. ரூ.15 இலட்சம் நிதி: பசுமைத் தொழில்நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு மற்றும் பெண்களை முதன்மைப் பங்குதாரர்களாகக் கொண்ட புத்தொழில் நிறுவனங்களுக்கு.

பெண்கள் உதவி மையம்

இதர துறை சார்ந்த புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ. 10 இலட்சம் நிதி வழங்கப்படுகிறது. டான்சீட் திட்டம் 2021-ல் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 169 புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதார நிதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

பயனாளிகளுக்கு ஓராண்டு காலத் தொழில் வளர்ப்புப் பயிற்சி, தொழில்முனைவு வழிகாட்டுதல்கள் மற்றும் தேசிய, பன்னாட்டு அளவிலான புத்தொழில் நிகழ்வுகளில் பங்கேற்க முன்னுரிமை வழங்கப்படும். உதவி பெறும் நிறுவனங்களிடமிருந்து தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் 3 சதவீத பங்குகளை ஆதரவுக்கான பங்காகப் பெற்றுக்கொள்ளும்.

தையல்காரர் டைலர் தையல்

விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் தமிழ்நாட்டினைத் தலைமையகமாகக் கொண்டிருக்க வேண்டும். மத்திய அரசின் டி.பி.ஐ.ஐ.டி (DPIIT) தளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். நிறுவனம் வேறு ஒரு நிறுவனத்தில் இருந்து பிரிந்து வந்ததாகவோ அல்லது வேறு ஒரு நிறுவனத்தின் கூட்டு/இணை நிறுவனமாகவோ இருத்தல் கூடாது.

விண்ணப்பம் தொடங்கும் நாள்: டிசம்பர் 6, 2025

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: டிசம்பர் 20, 2025

விண்ணப்பிக்கும் இணையதளம்: www.startuptn.in

தொடர்பு மின்னஞ்சல்: tanseed@startuptn.in

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!