அகவிலை நிவாரணம் 458% ஆக உயர்வு - தமிழக அரசு அரசாணை வெளியீடு!
தமிழக அரசு, பங்களிப்பு வருங்கால வைப்பு நிதி (CPF) திட்டத்தில் இருந்த அல்லது ஓய்வூதியம் அல்லாத பணியிடங்களில் பணியாற்றி இறந்த அரசு ஊழியர்களின் விதவைகள், அவர்களைச் சார்ந்த குழந்தைகள் மற்றும் முன்னாள் மாவட்ட வாரியப் பணியாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் கருணைக் கொடை (Ex-gratia) தொகையுடன் கூடிய அகவிலை நிவாரணத்தை (Dearness Allowance/Relief) உயர்த்தி முக்கிய அரசாணையை வெளியிட்டுள்ளது. பழைய விகிதம்: 447% (ஜூலை 2024 முதல்) புதிய விகிதம்: 458%. இந்த புதிய விகிதம் ஜனவரி 1ம் தேதி 2025 முதல்.அமலுக்கு வருகிறது.

இந்தச் சலுகை, வழக்கமான ஓய்வூதியம் பெறுவோருக்கு அல்லாமல், அரசு உத்தரவின்படி தற்போது ரூ. 645/- என்ற கருணைக் கொடை (Ex-gratia) தொகையைப் பெறும் ஒரு சிறிய குழுவினருக்கு மட்டுமே பொருந்தும். இவர்களின் மாதாந்திரத் தொகையுடன் சேர்த்து கூடுதலாக இந்த 458% அகவிலை நிவாரணம் வழங்கப்படும்.

மறைந்த பங்களிப்பு வருங்கால வைப்பு நிதி / ஓய்வூதியம் அல்லாத பணியிடப் பயனாளிகளின் விதவைகள் மற்றும் சார்ந்துள்ள குழந்தைகளுக்கும், ரூ. 645/- கருணைக் கொடை பெறும் முன்னாள் மாவட்ட வாரிய ஊழியர்களுக்கும் இது பொருந்தும். உயர்த்தப்பட்ட இந்த அகவிலை நிவாரணத் தொகையை 2025 ஜனவரி 1 முதல் கருவூல அதிகாரிகள் உடனடியாக வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
